பசுவின் பெருமை!
ADDED :3768 days ago
அத்தனிற் கைந்துகவ் வியநெய்ப யந்தயிர்கள்
ஆட்டிடுத லுக்கு தவலால்
அவ்வைந்தின் ஆசௌச நீக்கியுட் சுத்திதனை
அனைவர்க்கும் ஈந்தி டுதலால்
பத்தர்மறை யோர்கள்மெய் தரித்தரிய வீடுறும்
பானீறு விளைவித் திடலால்
பகர்கோம யம்தந்தி யாகாதி களில்அவிர்ப்
பாதங் கொடுத்து ஆகுதி
நித்தியம் இயற்றிடச் சுரருக்கும் முனிவர்க்கும்
நெய்யுதவி டும்பெரு மையால்
நீடமரர் அதலர்நர ருக்குமா வேசகல
நிதியாகும் எனவி யந்து
சித்தமகிழ் வுடன்நாளும் ஆதனைப் பூசனைகள்
செய்யவா கமமு ரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.