உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபெருமானுக்குரிய விரதங்கள்!

சிவபெருமானுக்குரிய விரதங்கள்!

இந்துதர நம்சமய விரதம்எழு மூன்றதில்
எழிற்சோ மதின மாதிரை
ஏர்தரும் உமாமகேச் சுரவிரத மணவிரதம்
இடபவிர தம்சி வநிசி
முந்துகே தாரநோன்பு உயர்சூல நோன்பெட்டும்
மொழிதரும் சிவவி ரதமாம்
மூலபரை விரதமது வெள்ளியுத் திரநவமி
மூன்றுமும் மதக டதடத்
தந்திமுகன் விரதமொரு சட்டி புகர்வாரம்
சதுர்த்தியாம் ஆரல் வெள்ளி
சட்டிகுக னுக்கிணைப் பரணிசேய் வயிரவர்
தனக்கிணையில் வீர னுக்குச்
செந்தழல் நிறத்தமங் கலவார மாம் என்று
செப்பி னாய்மறை யாகமம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !