சூதக விதிகள்!
ADDED :3785 days ago
பத்திரவு மறையவர்க்(கு) அரசர்வை சியர்க்குநாள்
பதினாறு சுத்த சைவப்
பாங்குடைய சூத்திரர் உருத்திரக ணிகைக்குநாள்
பதினைந்த தாகும் புலான்
மெத்துநுகர் வணிகருக் கிருபதாம் இரவென்றும்
வினையுழவ ருக்கு முப்பான்
மேலிரண்டு இரவுசூ தகமதிற் பூசைசெபம்
வேள்விகள் முயன்று புரிதற்(கு)
ஒத்தமுறை யன்றவைகள் பாவனைய தாற்செயவும்
ஒண்ணாது பிறர்புரி தல்மற்(று)
ஒருவருக் குத்தன்னில் ஈவதொப் பெனல்ஈர
உடையுடன் இலிங்க பூசை
சித்தபரி சுத்தமுடன் ஆற்றல்முறை யென்றே
சிறந்தஆ கமம்உ ரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.