உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவில் முத்துமாரியம்மன்கோவில் திருவிழா!

காளையார்கோவில் முத்துமாரியம்மன்கோவில் திருவிழா!

காளையார்கோவில்: காளையார்கோவில் அருகே செவல்புஞ்சை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. ஜூன் 23ம் தேதி  காப்புக்கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் கரகம் திருவீதி உலாவந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று பக்தர்கள் விரதமிருந்து பாத யாத்திரையாக வந்து பால்குடம், பறவைக்காவடி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !