வேடசந்தூர் முத்தாலம்மன் கோவில் திருவிழா!
ADDED :3833 days ago
வேடசந்தூர்: கோவிலூரில், மாரியம்மன், முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில், கரகம் பாலித்தல், அக்னிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மூன்றாவது நாளான நேற்று, கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி வெகு நேரம் சிறப்பாக நடந்தது. இதில் கோவிலூரை சேர்ந்த பாலன் என்பவர், மரத்தின் உச்சிக்கு சென்று, அங்கு ரூ.1001 உடன் கூடிய பணமுடிப்பை எடுத்து, வெற்றி பெற்றார். சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.