சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா சுதர்சன ஹோமம்
ADDED :5233 days ago
கடலூர்: அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா சுதர்சன ஹோமம் நடந்தது.கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் விஜயவல்லி தாயார் சமேத சக்கரத்தாழ்வார் கோவிலில், உலக நன்மைக்காக மகா சுதர்சன ஹோமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை நித்தியபடி ஆராதனம், புண்யாஹவசனம், கலச ஆவாஹணம், மகா சுதர்சன ஜபம் நடந்தது. அதனைத்தொடர்ந்து லட்சுமி, லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, சுதர்சன, அஷ்ட லட்சுமி, அனுமன் ஆகிய ஹோமங்கள் நடந்தது. பகல் 12 மணிக்கு பூர்ணாஹூதி, சேவை சாற்றுமுறை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.