ரிஷிவந்தியம் கோவிலில் நாளை தேரோட்ட விழா
ADDED :5303 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா நாளை நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரம் செய்து, வீதியுலா நடந்து வருகிறது. நாளை மதியம் 2.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நூற்றாண்டு பழமையான தேர் அறநிலையத்துறையின் முயற்சியால் கடந்த ஆண்டு 12.5 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. தேர் செல்லும் வீதிகளில் உள்ள பள்ளங்கள் செப்பனிடப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.