அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்!
ADDED :4022 days ago
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம் நடந்தது.
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவம் கடந்த 22ம் தேதி துவங்கியது. தினமும்பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.
கடந்த 30 ம் தேதிதேரோட்டமும், அதைத்தொடர்ந்து தீர்த்தவாரி உற்வசமும் நடந்தது. விழாவின் 11ம் நாள் விடையாற்றிஉற்சவத்தை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகமும், சண்டிகேஸ்வரர்உற்சவமும் நடந்தது.
தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், மகாதீபாராதனை செய்யப்பட்டது. செங்குந்தர் முதலியார் வகையறாவினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேற்று ஊஞ்சல் உற்சவத்துடன் பிரமோற்சவம் விழா நிறைவு பெற்றது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர்.