கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் குரு பெயர்ச்சி வைபவம்!
ADDED :3752 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நாளை குரு பெயர்ச்சி
வைபவம் நடக்கிறது.குரு பெயர்ச்சியையொட்டி கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில்
நாளை காலை பஞ்ச மூர்த்தி தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்கின்றனர். மாலை 6 மணிக்கு
குரு கலசங்கள் ஆவாகனம், சிறப்பு பூஜைகள், யாகம் நடத்தப்படுகிறது.தட்சணாமூர்த்திக்கும்,
நவகிரகங்களில் உள்ள குருபகவானுக்கும் இரவு 10 மணிக்கு கலசாபிஷேகம் செய்து
வைக்கப்படுகிறது.
குரு பெயர்ச்சி நேரமான இரவு 11.01 மணிக்கு குருபகவானுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்படுகிறது.இதேபோல் ஏமப்பேர் விஸ்வநாதர், சின்னசேலம் கங்காபுரீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், முடியனூர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர்
ஆகிய கோவில்களிலும் குரு பெயர்ச்சி பூஜைகள் நடக்கிறது.