பழநி அன்னாபிஷேக விழா நிறைவு!
ADDED :3751 days ago
பழநி: உலக நலன் வேண்டி பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் தொடர்ந்து 4 நாட்கள் அன்னாபிஷேகம் நடந்தது.
ஜூலை 1ல் திருஆவினன்குடிகோயிலில் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் பெரியநாயகியம்மன் கோயிலில் அம்மன், சிவன், நடராஜர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்புஅபிஷேகமும்,
அன்னாபிஷேகம் நடந்தது. ஓட்டல் கண்பத் உரிமையாளர்கள் ஹரிஹரமுத்து, செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்தனர். நேற்று கோதைமங்கலம் சண்முகநதிக் கரையிலுள்ள பெரியாவுடையார் கோயிலில் மாலை 4.30மணிக்கு மேல் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்து அன்னாபிஷேகம் நடந்தது.
நிகழ்ச்சி உபயதாரர்கள் கந்தவிலாஸ் செல்வக்குமார், நவின்விஷ்ணு, நரேஷ்குமரன்
மற்றும் சுகிதா மெட்டல் சுகுமார், கான்ட்ராக்டர் நேரு பங்கேற்றனர்.