சாத்தாவுராயர் கோயில் சாமிகும்பிடு விழா!
ADDED :3751 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் ராஜதேசாதிபதி 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்திற்கு
பாத்தியப்பட்ட சாத்தாவுராயர் கோயிலில் சாமி கும்பிடு விழா நடந்தது.சாமி சாட்டுதல்
நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
பின்னர் ராம அழகர் சுவாமி பிருந்தாவன தோப்பிற்கு சென்று சுவாமி அழைப்பு நடந்தது. மதியம் பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு,அபிஷேக ஆராதனை நடந்தன. மாலையில் சுவாமி பெட்டி கட்டி மஞ்சள் நீராடல் நடந்தது. இரவு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.