மொரட்டாண்டி கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
புதுச்சேரி: குரு பெயர்ச்சியை யொட்டி, மொரட்டாண்டி விஸ்வரூப மகா சனீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.நேற்று காலை 7.30 மணிக்கு சிறப்பு ஹோமங் கள் நடந்தன. இரவு 11.02 மணிக்கு குரு சாந்தி, நவக்கிரக சாந்தி ஹோமம், தட்சணாமூர்த்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம், குரு பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை லலிதாம்பிகை வேத சிவாகம டிரஸ்ட் மற்றும் சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம குருக்கள் செய்திருந்தனர்.கருவடிக்குப்பம்ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இரவு 7:00 மணிக்கு, கலச பிரதிஷ்டை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், இரவு 10:30 மணிக்கு குருவிற்கு மகா அபிஷேகமும், 11:02 மணிக்கு குருவிற்கு மகா தீபாராதனையும் நடந்தது. பெத்துசெட்டிப்பேட்டை சித்தி விநாயகர், சிவசுப்ரமணியர் சுவாமி கோவி லில், குருபெயர்ச்சி பெருவிழா நேற்று நடந்தது. இரவு 8:00 மணிக்கு, விநாயகர் பூஜை, கலச ஸ்தாபனம், குருபகவானுக்கு சிறப்பு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. நாணமேடு நாணமேடு இடையார்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், குரு ஹோமம், சேஷாத்திரி சுவாமிகள் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம் நடந்தது. விழா ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்திருந்தார்.