ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் சன்னதியில் கலசபூஜை!
ADDED :3861 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் சன்னதியில் மண்டாலபிஷேகத்தை முன்னிட்டு108 கலசபூஜை நடந்தது. இக் கோயிலுக்கு கடந்த மே 22ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 48 நாள் மண்டாலபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, பெரியாழ்வார் ஆகியோர்களுக்கு 108 கலச பூஜைகள் நடந்தது. முத்து பட்டர்,சுதர்சன பட்டர் தலைமையில் பட்டர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி,பூமாதேவி, பெரியாழ்வார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் உபயதார் ஏ.எல். நாராயண அய்யர் குடும்பத்தார் பங்கேற்றனர்.