அபிநவ மந்த்ராலயா ராகவேந்திரர் கோவிலில் பழக்காப்பு அலங்காரம்!
ADDED :3744 days ago
விழுப்புரம் : விழுப்புரம் அபிநவ மந்த்ராலயா ஸ்ரீராகவேந்திரர் கோவிலில், பழக்காப்பு அலங்காரம் நடந்தது. விழுப்புரம் வண்டிமேடு, கே.வி.ஆர்.நகரில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை 6:05 மணிக்கு, குருஜி ராகவேந்திராச்சார் தலைமையில் ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு, பழக்காப்பு அலங்காரம் நடந்தது. இதில், சங்கடகர சதுர்த்தி ஹோமம் மற்றும் குருபெயர்சியை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு ஹோமங்கள் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயலர் ராகவேந்திரன் செய்தார்.