பக்தி இருப்பவர்களுக்கும் கஷ்டம் அதிகமாக இருக்கிறதே.. பரிகாரம் என்ன?
ADDED :3827 days ago
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே என்கிறது தேவாரம். திருநாவுக்கரசரை கல்லுடன் சேர்த்துக் கட்டி, மகேந்திர பல்லவன் கடலில் வீசிய போதும் சிவனே எனக்குத் துணை என்று சரணடைந்தார். பக்தி ஆழமாக இருந்தால், துன்பக் கடலும் கடைக்கால் அளவே என்பதை அருளாளர்களின் வாழ்க்கை உணர்த்துகிறது. இதை மனதில் கொண்டு நம் வாழ்வை நடத்த வேண்டும்.