உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலோகநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா!

சிவலோகநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா!

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், குருப்பெயர்ச்சியை ஒட்டி தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வேள்வி, அபிசேக அலங்கார பூஜைகள் நடந்தன. அக்கோவிலில் நேற்றுமுன்தினம் காலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. பின், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிசேக பூஜை செய்யப்பட்டது. அதில், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் போன்றவைகளால் அபிசேகம் செய்தனர். பின், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மூலவர் சிவலோகநாதர், சிவலோகநாயகி மற்றும் முருகன், சண்டீகேஸ்வரர் ஆகியோருக்கு பூஜை செய்த பின், தட்சிணாமூர்த்திக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இப் பூஜையில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !