சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பு!
ADDED :4070 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் 108 முறை கோவிலை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். பூ ஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். பரம்பரை தர்மகர்த்தாக்கள் நடனசபாபதி, சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.