ஸ்பெயினில் ஜல்லிக்கட்டு!
மேட்ரிட்: இளைஞர்களின் எலும்புகளை உடைத்து, ரத்தக் களறியாக்கும், ஸ்பெயின் நாட்டு, ‘சென் பார்மின்’ திருவிழா துவங்கிவிட்டது. ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஒன்பது நாட்கள் நடக்கும், ‘சென் பார்மின்’ என்னும் காளை ரேஸ், 6ம் தேதி துவங்கி, வரும் 1௩ம் தேதி நள்ளிரவு 12:00 மணியுடன் முடிவடைகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெம்பலோனா சதுக்கத்தில் ஒன்று திரண்டிருக்கின்றனர். இளைஞர்களின் ஆட்டம், பாட்டத்துடன் துவங்கிய இந்த விழாவை காண, வெ ளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்துள்ளனர். ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்ட காளை மாடுகள் உசுப்பேற்றப்பட்டு (கோபமூட்டி), வெ ளியில் திறந்து விடப்படும். குறுகலான, 850 மீ., நீளமுள்ள சாலைகளில், சீறிப் பாய்ந்து வரும் காளைகளுக்கு முன், இளைஞர்கள் தங்கள் வீரத்தை காட்டுவர். எழுத்தாளர் ஆர்னெஸ்ட் ஹெமிங்வேயால் பிரபலமான, இந்த காளை ரேசில், பாய்ந்து வரும் காளைகள், எதிரில் வரும் இளைஞர்களை முட்டி, அவர்களின் எலும்புகளை உடைத்தும், கொம்பால் குத்தி ரத்தக் களறியாக்கினாலும், அனைவரும் புன்சிரிப்புடன் காணப்படுவர். அட, இது நம்மூரு ஜல்லிக்கட்டு!