ஞான நெறி!
ADDED :3746 days ago
மூலமுதல் நாதவெளி மேலுறு துவாதச
முடிந்த விடம்ஈ றாகவே
மூதண்ட கூடத்தொ(டு) அளவில்பிர மாண்டமதை
மூடுபர வெளியின் முடிவின்
மேலும்ப ரஞ்சோதி வடிவாகி யெங்கும்வி
யாபியாய்ப் பரம அணுவாய்
விரிபுவனம் உடல்உயிரின் மயிர்முனைக் கிடமின்றி
மேவி நிறைபரி பூரணக்
கோலமாய் நின்றவொரு பரமென்றி யாமென்று
கூறு செய்யா தொன்றெனக்
கொண்டுரைசெ பந்துயில் சமாதிவல நடையுணவு
கொளனுகர் வாகுதி செயலெலாம்
சிலமுறு பூசனைக ளாகஎத் தொழிலுநின்
செயலென் றிருத்தல் ஞானம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.