வளரொளி நாதர்
ADDED :3803 days ago
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்
திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்ட
அருக்கனவன் ஒளிபோலக்கோடிப் பங்காய்
அழல் போலும் வளரொளியை வீசும்நாதா
எருக்கம்பூ மாலையினை ஏற்ற போதும்
எழிலார்ந்த மல்லிகையாய் மணக்கும்ஈசா!
உருக்கமுடன் உன்பாதம் வணங்கு கின்றோம்
ஒளிமயமாய் ஒளிர்பவனே! காப்பாய் அப்பா!