பழநி பெரியாவுடையார் கோயிலில் மண்டல சிறப்பு யாக பூஜை!
ADDED :3856 days ago
பழநி: பழநி பெரியாவுடையார் சிவன்கோயிலில் மண்டல சிறப்பு யாகபூஜை நடந்தது. பழநி கோதைமங்கலம் சண்முகநதிக்கரை பெரியாவுடையார் சிவன் கோயிலில் கடந்த மே 22ல் மகாகும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடத்தப்பட்டு, இறுதிநாளான நேற்று காலை 8 மணிக்குமேல் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் நிரம்பிய 27 கும்பங்கள் வைத்து, மகா ருத்ரயாகம் நடந்தது. பின் உச்சிகாலத்தில் மூலவர் பெரியாவுடையாருக்கு மகாஅபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பழநிகோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் ஓட்டல் ஹரிஹரமுத்து உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.