விருத்தாசலம் சத்யசாய் பாபா அவதார நாள் ஊர்வலம் நிறைவு!
ADDED :3823 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் சத்ய சாய்சேவா சமிதி ஊர்வலம் நிறைவடைந்தது. நவம்பர் 23ம் தேதி, சத்யசாய் பாபா 90வது அவதார நாளை முன்னிட்டு, விருத்தாசலம் சத்யசாய் சேவா சமிதி சார்பி ல் விருத்த கி ரீ ஸ்வரர் கோவில் தேரோடும் வீதிகளில் 90 நாட்கள் தொடர்ந்து நடந்த ஊர்வல நிகழ்ச்சி நேற்றுடன் முடிந்தது.
அதில், மாவட்டத்தலைவர் சாய்பிரசாத் நாம சங்கீர்த்தனம் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் குப்பு சாமி, மாவட்ட மகிளாசேவை ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி மணி உட்ப டபலர் பங்கேற்றனர். ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் வெற்றி வேல் நன்றி கூறினார்.