வேலுார் திருடப்பட்ட ஐம்பொன் சிலை மீட்பு!
ADDED :3773 days ago
வேலுார்: அரக்கோணம் அருகே, கோவிவில் திருட்டுபோன, ஐம்பொன் சுவாமி சிலை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக, வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே, வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில், நேற்று முன்தினம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக, தலையில் பிளாஸ்டிக் பையுடன் வந்த வாலிபரின் பையை சோதனையிட்டனர். அதில், ஐம்பொன் விநாயகர் சிலை இருந்தது. விசாரணையில், அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் கிராம விநாயகர் கோவிலில் இருந்து, கடந்த ஆண்டு, ஆக., 8ல், சிலையை திருடியது தெரிய வந்தது. மேலும், அந்த வாலிபர், கீழாந்துார் கிருஷ்ணன், 27, என்பதும் கண்டறியப்பட்டது. மீட்கப்பட்ட சிலை, 3 அடி உயரமும், 40 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. சிலையை கைப்பற்றிய போலீசார், அவரை கைது செய்தனர்.