திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!
ADDED :3773 days ago
உத்திரமேரூர்: ஆனம்பாக்கத்தில், திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனம்பாக்கத்தில், கிராமத்திற்கு சொந்தமான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டிற்கான, ஆனி மாதம் அக்னி வசந்த மகோற்சவ விழா, கடந்த மாதம் 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, காலை, 11:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, தீமிதி விழா நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து, தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.