உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரளயகாலேஸ்வரர் கோவிலில் பச்சை குத்திய சிவனடியார்கள்!

பிரளயகாலேஸ்வரர் கோவிலில் பச்சை குத்திய சிவனடியார்கள்!

பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் ஏராளமான சிவனடியார் பச்சைக் குத்திக் கொண்டனர்.

பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தலத்தில், அப்பர் சமண மதத்திலிருந்து சைவமதத்திற்கு மாறியதால் அப்பருக்கு அம்பாள் காட்சியளித்து அவருக்கு ரிஷப முத்திரை, சூல முத்திரைவழங்கினார். இதனால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்து சிவனடியார்கள் இக்கோவிலுக்கு வந்து தங்களின் கைகளில் சூலம், ரிஷப (நந்தி) முத்திரைகளை பச்சைக்குத்தி, நேர்த்திக் கடன்செலுத்துவர்.

அதன்படி, நேற்று திருக்கழுகுன்றம் பகுதியிலிருந்து பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு வந்த ஏராளமான சிவனடியார்கள், தங்கள் கைகளில் சூலம், ரிஷப முத்திரைகளை பச்சைக்குத்திக் கொண்டனர். தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !