ரமலான் சிந்தனைகள்: 25- நமக்கே இல்லாவிட்டாலும்...!
“நோன்பு திறக்கும் மாலை நேரத்தில் ஏழைகளுக்கு நோன்புக் கஞ்சியோ, ரொட்டியோ கொடுக்க வேண்டும். இந்த தர்ம சிந்தனையை, நாம் நாயகத்தின் அருமைத் துணைவியார் ஆயிஷா அம்மையாரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அரபு நாட்டில், ஹஸ்ரத் மு ஆவியா என்பவர் கலீபாவாக (மன்னர்) இருந்தார். அவர் ஒரு ரம்ஜான் மாதத்தில், இரண்டு லட்சம் வெள்ளிக்காசுகளை ஆயிஷா அம்மையாருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அம்மையார் அதை ஒரே நாளில் ஏழைகளுக்கு தானம் செய்து விட்டார். அப்போது பணிப்பெண் வந்தாள்.
“அம்மா! இன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் சாப்பிட ஏதுமில்லை,” என்றாள்.
அம்மையார் அவளிடம், “அதுபற்றி நீ கவலைப்படாதே,” எனச் சொல்லி விட்டார்.
ஒருநாள், நோன்பு திறந்த பிறகு, தனக்காக சாப்பிட வைத்திருந்த இரண்டு ரொட்டிகளை, ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்க அவரிடம் கொடுத்து விட்டார். தானம் செய்யும் போது, அவர் ஆடம்பர உடையோ, நகையோ அணிந்திருக்கவில்லை. ஒட்டுத்துணி போட்ட கிழிந்த அங்கியை
அணிந்திருந்தார். எவ்வளவு பெரிய தயாள உள்ளம் பாருங்கள்!தனக்கே இல்லாவிட்டாலும், தர்மம் செய்யும் தயாள குணம் வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23 மணி