உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்: நல்லதைக் கற்றுத்தருவோம்!

ரமலான் சிந்தனைகள்: நல்லதைக் கற்றுத்தருவோம்!

“மனிதன் பிறப்பதின் நோக்கமே இறைவனை தொழ வேண்டும் என்பதற்காகத்தான். அதை இளமையிலேயே செய்யத் துாண்ட வேண்டும். “(எனக்கு வழிபட்டு என்னை) வணங்குவதற்கன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை என்று (இறைவன்) கூறுகின்றான்,” என்ற குர்ஆன் வசனமே இதற்கு சாட்சி. அதாவது, இறைவனை வணங்குவதைத் தவிர, பிற எந்தச் செயலுக்காகவும் மனிதர்கள் இவ்வுலகில் பிறப்பதில்லை. குழந்தைகள் பேச ஆரம்பித்ததும், முதல் வார்த்தையாக அல்லாஹ் என கற்றுத் தர வேண்டும். பேச்சு அதிகரித்ததும், லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுலலாஹி என்னும் கலிமாவைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படியே படிப்படியாக வளர்ந்து, நாயகத்தின் வரலாறு உள்ளிட்டவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஐந்து வயதில் மத்ரஸாவிற்கு அனுப்பி, மார்க்கக் கல்வியை புகட்டத் துவங்க வேண்டும். ஏழு வயதில் தொழுவதற்கு கற்றுத் தர வேண்டும். “உங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்பிப்பதானது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படி தானியம் தர்மம் செய்ததின் நன்மை கிடைக்கும்,” என்கிறார் நபிகள் நாயகம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !