கொருக்கை கோயிலில் பழமையான ஐம்பொன் சிலை திருட்டு!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கொருக்கை கிராமத்தில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந் தமான தேவார பாடல் பெற்ற சிவாலயங்களில் 26வது தலமும், அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர் கோயில் அமைந்தள்ளது. 1, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 1959ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் கோயில் மிகவும் சிதிலமடைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பூஜைகளை முடித்து கோயில் சன்னதி கதவுகளை குருக்கள் சோமசுந்தரம், இரவு காவலாளி மாரிமுத்து ஆகியோர் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு கோயில் கதவுகளை திறந்த மெய்காவலாளி நடராஜர் சன்னதி கதவுகள் திறந்து கிடந்ததையும், அங்கிருந்த 3. 5 அடி உயரம், 40 கிலோ எடையுள்ள பழமைவாய்ந்த ஐம்பொன் சிலை கானாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில் கோயில் குருக்கள், தருமபுரம் ஆதின அதிகாரிகள், மணல்மேடு போலீசார் விரைந்து வந்து கோயில் ஊழியர்களிடம் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர். போலீசார் விசாரனையில் கோ யில் பின்புறம் வழியே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சன்னதி கதவை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலையை திருடி சென்றதும், தடயம் எதுவும் சிக்காமல் இருக்க அங்கு மிளகாய் துõல் துõவி சென்றிருப்பதும் தெரியவந்தது. மேலும் நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டது. மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்ட நடராஜரின் ஐம்பொன் சிலை விலை மதிப்பற்றது என கூறப்படுகிறது. இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.