உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடும்பாவி இழுத்து மழை வேண்டி ஒப்பாரி!

கொடும்பாவி இழுத்து மழை வேண்டி ஒப்பாரி!

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே மழை வேண்டி கிராம மக்கள் கொடும்பாவி கட்டி இழுத்து ஒப்பாரி வைத்தனர். திரு வெண்ணெய்நல்லூர் அடுத்த ஏனாதிமங்கலத்தில் கிராம மக்கள் மழைவேண்டி கொடும்பாவி கட்டி இழுத்து ஒப்பாரி வைத்தனர். கடந்த 13ம் தேதி  மாலை 6:00 மணிக்கு வைக்கோல் மற்றும் களிமண்ணால் பெண் ராட்சச உருவம் செய்தனர். அதன் மீது அகல்விளக்கை ஏற்றி தெருத்தெருவாக  இழுத்துச் சென்றனர். இரவு 8:00 மணிக்கு சுடுகாட்டின் முகப்பில் இந்த பொம்மையை வைத்து விதவைகள் ஒப்பாரி வைத்து அழுதனர். இவ்வாறு  செய்வதன் மூலம் மழை வரும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !