ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தின பூஜை!
ADDED :3777 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருள் தரும் ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் அ ருள்தரும் ஐயப்பன் கோவிலில் மூன்றாம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தையொட்டி, கணபதி ஹோமம் மூலமந்திர ஹோமம் நடந்தது. சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு யாகம் நடத்தி ஐயப்பனுக்கு பூஜை செய்த சங்குகளில் இருந்த புனிதநீரால் சங்காபிஷேகமும் அஷ்டதச அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை முருகன் சிவாச்சாரியார் தலைமையில் செய்தனர். வைத்தி, குமார், சுவாமிபிள்ளை, சிவகுருநாதன், ராஜேந் திரன், கல்யாணசுந்தரம், ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு சுவாமி வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.