ஆதிமனிதர் வரைந்த சித்திரங்கள் கண்டுபிடிப்பு!
ADDED :3777 days ago
திருப்பதி : தெலுங்கானாவில், 8,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ஆதி மனிதர்கள், வரைந்த சித்திரங்கள், தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தெலுங்கானா மாநிலம், மெஹபூப்நகர் மாவட்டம், தேவரகத்ர ஊரில் உள்ள மலை பகுதியில், ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்து உள்ளன. இங்குள்ள மலை குகையில், யானை, குதிரை, பல்லி, ஓணான், வில், தாமரை, அக்காலத்தில் செய்த விவசாய முறைகள், உள்ளிட்ட சித்திரங்கள் உள்ளன. இந்த சித்திரங்கள், 8 - 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.