உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்த தீட்சிதருக்கு சிலை அவசியம்: அஹோபில மடத்தின் பீடாதிபதி கருத்து

கோவிந்த தீட்சிதருக்கு சிலை அவசியம்: அஹோபில மடத்தின் பீடாதிபதி கருத்து

கும்பகோணம்: ""கும்பகோணம், மகா மககுளத்தை தீர்மானித்த கோவிந்த தீட்சிதருக்கு சிலை அமைப்பது அவசியமானது, என அஹோபில மடத்தின், 46வது பட்டம் அழகிய சிங்கர் சுவாமிகள் தெரிவித்தார். கும்பகோணம் சாரங்கபாணி கோவில் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக, கும்ப கோணம் வந்திருந்த அஹோபில மடத்தின் பீடாதிபதி அழகிய சிங்கர் சுவாமிகள் கூறியதாவது: கோவிந்த தீட்சிதருக்கு சிலை வைக்க வேண்டும், என்பது பலரின் விருப்பமாக உள்ளது. அது அவசியம். ஒவ்வொரு ஊரிலும் அய்யன் வாய்க்கால், அய்யன் குளம் என்ற பெயருடன் திகழ்கிறது. அதெல்லாம் அவர் உருவாக்கியது. தர்ம சாஸ்திரங்கள் வைக்க வேண்டும், உலகம் தழைக்க வேண்டும் என்றால், வேதம் தழைக்க வேண்டும். வேதம் தழைக்க, கும்ப கோணத்தில், 460 ஆண்டுகளுக்கு முன், வேத பாடசாலையை நிறுவினார். அதற்கு ராஜா வேதபாட சாலை என பெயரிடப் பட்டுள்ளது. திருவையாறு அருகே உள்ள அம்மன் அக்ரஹாரத்திலும் பாடசாலை அமைத்துள்ளார். உலகத்தில் எந்தந்த காலங்களில் எந்தந்த செயல்கள் செய்யவேண்டும் என வேதத்தில் கூறியிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள மந்திரங்களை, அந்தந்த காலங்களில் செய்து காண்பித்தவர். பயிர்கள் நன்றாக வளர்ந்து அனைவரும் நலமாக வாழவேண்டும் என்பதற்காக, பல நற்காரியங்களை செய்துள்ளார். கும்பகோணத்தில் மகாமக குளம் உருவானதற்கு காரணமே அவர் தான். பல தர்மங்களை செய்துள்ளார். அவருக்கு சிலை வைக்க வேண்டியது அவசியம். மகாமககுளத்தில் அவரது சிலையை வைக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !