அவலூர்பேட்டையில் பிரதோஷ வழிபாடு
ADDED :3913 days ago
அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை, வளத்தி பகுதியில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு சுவர்ணாபிஷேகம், பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதே போல் வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலிலும் பாலாபிஷேகம், தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.