மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு!
ஆனைமலை :ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்றுமுன்தினம் இரவு, 10:00 மணியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வளாகத்தில் குவிந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அத்துடன் கோவிலின் சிறப்பாக கருதப்படும் மிளகாய் அரைத்தல் மற்றும் எண்ணெய் காப்பு சாத்துதல் நடந்தது. அத்துடன் மாசாணியம்மனின் உற்சவ சிலைக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை, 6:30 மணிக்கு முதல் பால் அபிேஷகத்துடன் பூஜைகள் துவங்கின. இதையடுத்து மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சியிலிருந்து போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.