உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிணாமூர்த்தி சிலை பிரதிஷ்டை விழா!

தட்சிணாமூர்த்தி சிலை பிரதிஷ்டை விழா!

ஆனைமலை: ஆனைமலையில் நடந்த குருப்பெயர்ச்சி யாகம் மற்றும் தட்சிணாமூர்த்தி சிலை பிரதிஷ்டை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்÷ கற்றனர். ஆனைமலை ஆழியாறு ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சக்தி பால முருகன் கோவில். இங்கு நேற்றுமுன்தினம் குரு பெயர்ச்சியை முன்னிட்டு,  சிறப்பு யாகம் மற்றும் தட்சிணாமூர்த்தி சிலை பிரதிஷ்டை விழாவும் நடந்தது. நவகிரக ஹோமமும், குருபிரீத்தி யாகமும்   நடத்தினர். யாகத்தில் மஞ்சள் வஸ்திரம், முல்லைப்பூ, சுண்டல்கடலை, தயிர்சாதம், இனிப்புவகைகள் இடப்பட்டன. முடிவில் ஸ்ரீ குரு பகவானுக்கு   சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !