முதல்வர் நலமுடன் வாழ ஸ்ரீரங்கம் கோவிலில் யாகம்?
ADDED :3851 days ago
திருச்சி: தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலத்துடன் இருப்பதற்காக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால், வழக்கமான சுதர்ஸன யாகமே நடந்ததாக, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்தார். நேற்று காலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், தமிழக முதல்வர் உடல்நலத்துடன் இருப்பதற்காக, கோவில் குருக்கள் சுந்தர்பட்டர் தலைமையில், சிறப்பு யாகம் நடப்பதாக தகவல் வெளியானது. கோவில் இணை ஆணையர் ஜெயராமனிடம் கேட்ட போது, கோவிலில், வழக்கமாக நடைபெறும் சுதர்ஸன ஹோமம், நேற்றும் நடந்தது. வேறு எந்த ஒரு ஹோமமும், கோவிலில் நடக்கவில்லை, என்றார்.