உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மனுக்கு 700 கி.,மஞ்சள் அபிஷேகம்!

முத்துமாரியம்மனுக்கு 700 கி.,மஞ்சள் அபிஷேகம்!

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயிலில், ஆடியை முன்னிட்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு அபிஷேக ங்கள் நடக்கின்றன. அம்மனை குளிர்விக்கும் வகையில், இன்று முதல் வெள்ளியை முன்னிட்டு, பச்ச மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது. நேற்று மாலை  5 மணியிலிருந்து, பக்தர்கள் கோயில் பிரகாரத்தில் உள்ள 35-க்கும் மேற்பட்ட அம்மியில் மஞ்சள் அரைக்க ஆரம்பித்தனர். இரவு 10 மணி வரை  அரைக்கும் பணி தொடர்ந்தது. இன்று காலை ஆறு மணி முதல் மஞ்சள் அரைக்க உள்ளனர். மதியம் 12.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. இதற்காக  700 கிலோ வரை பெறப்பட்டுள்ளது. மஞ்சள் அரைக்கும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !