மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
3707 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3707 days ago
கார்வளரும் மேனியா! கருப்பண்ண சாமியே!கதிவளரும் குதிரையில் கை வளரும் வாளுடன்கண்ணெதிரில் தோன்றி வருக!தேர்வளரும் கோயிலாய் திசைவளரும் புகழனே!தெரிந்தவரை நல்லதே செய்துவரும் எங்களைத்தேடியே ஓடி வருக!மார்வளரும் மாலையாய்! மனைவளரும் தெய்வமே!மடைவளரும் வெள்ளமாய் மழைபொழியும் மேகமாய்மனையினை நோக்கி வருக!பேர்வளரும் தெய்வமே! பெரிய கருப்பண்ணனே!பிழைவளரும் உலகிலே பிழைக்கவழி காட்டவேபிள்ளையைத் தேடி வருக!சீர்வளரும் காலிலே சேர்ந்திடும் சதங்கைகள்செககண செககண செவிபட முழங்கவேதெருவிலே ஓடி வருக!தார்வளரும் மெய்யனே! தமிழ் வளரும் ஐயனே!தன்மையுடன் கிண்கிணி தந்தினத்தோம் எனவேசத்தியம் முழங்க வருக!போர்வளரும் வீரனே! புகழ்வளரும் கருப்பனே!புகைவளரும் தாபமும் பூவளரும் பூசையும்புரிந்துமே எழுந்து வருக!ஏர்வளரும் அழகனே! எங்கள் குல தெய்வமே!எப்பிழை செய்யினும் அப்பிழை நீங்கவேஎதிரிலே தோன்றி வருவாய்.
3707 days ago
3707 days ago