பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் திறப்பு
ADDED :3757 days ago
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயிலில் 9 உண்டியல்கள் உள்ளன. அவை நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.18 லட்சத்து 12 ஆயிரத்து 563, தங்கம் 270 கிராம், வெள்ளி ஒரு கிலோ 710 கிராம் இருந்தது. அப்போது இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர்சுந்தரமூர்த்தி, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணகணேசன், ஆய்வாளர் மாரியப்பன், கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் உடனிருந்தனர்.