பத்ரகாளியம்மன் கோவிலில் அடி செவ்வாய் வழிபாடு!
ADDED :3815 days ago
காரைக்கால்: காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று அடி செவ்வாய் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மயிலாடுத்துறை, நாகப்பட்டினம், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து தினம் பக்தர்கள் வருகின்றனர். இதில் செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கான பக்தர்கள் பத்ரகாளியம்மனை தரிசனம் முடித்து விட்டு காளியம்மன் சன்னதியில் படுக்குமுறையை செய்வது வழக்கம்.மேலும் இன்று அடி செவ்வாய் கிழமையில் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கணப்படுவதால்.கோவில் நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் பக்தர்களுக்காக குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளனர்.