கண்டாச்சிபுரம் கோவிலில் பால் குட அபிஷேக விழா!
ADDED :3815 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அரசமரத்தடி பிள்ளையாருக்கு பால்குட அபிஷேக விழா நடந்தது. கண்டாச்சிபுரம் மடவிளாகம் பகுதியில் உள்ள அரசமரத்தடி பிள்ளையாருக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. முன்னதாக மழை வேண்டி யாகம் நடந்தது. தொடர்ந்து, வினாயகருககு சிறப்பு அலங்காரத்துடன் ஆராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சிவாச்சாரியார் பாலகிருஷ்ணன், உபயதாரர் ஜெயபால் ஆகியோர் செய்தனர். இதில் திருத்தல இசைக்குழுவினர் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.