உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழுநீரம்மன் கோவில் பெருவிழா கொடியேற்றம்

செங்கழுநீரம்மன் கோவில் பெருவிழா கொடியேற்றம்

புதுச்சேரி: செங்கழுநீரம்மன் கோவிலில் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. புதுச்சேரி வாழைக்குளம் அப்பாவு நகர் செங்கழுநீரம்மன் கோவிலில் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. தினம் இரவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. 24ம் தேதி செடல் உற்சவம், மாலை 6 மணிக்கு தேர்த் திருவிழா நடக்கிறது. 25ம் தேதி இரவு 9 மணிக்கு அம்மன் தெப்பல் உற்சவம், 26ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !