ஆற்காட்டு அய்யனாரப்பன் கோவில் செடல் திருவிழா
ADDED :3813 days ago
திருபுவனை: மதகடிப்பட்டு கிராமத்தில் உள்ள ஆற்காட்டு அய்யனாரப்பன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.விழாவையொட்டி காலை 8.00 மணிக்கு அய்யனாரப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 11.00 மணிக்கு அய்யனாரப்பனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். தொடர்ந்து 4.00 மணிக்கு பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திகடன் செலுத்தினர். இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.