உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்டபுயகரப்பெருமாள்!

அட்டபுயகரப்பெருமாள்!

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பிகள் வீதியில் உள்ளது. அட்டபுயக்கரப்பெருமாள் கோயில். திருமால் எட்டு கைகளுடன் ஒவ்வொன்றிலும் ஆயுத மேந்தி அருள்புரியும் தலமிது. பிரம்மாவின் யாகத்தை அழிக்கும் நோக்குடன் காளியை தேவியை ஏவினாள் சரஸ்வதிதேவி. காளியை அடக்க, தமது எட்டு திருக்கரங்களிலும் எட்டு விதமான ஆயுதங்களை ஏந்தி, ஆதிகேசவன் எனும் பெயரில் திருமால் நின்ற தலம் இது. பெருமாள் வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும், இடது நான்கு திருக்கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவையும் கொண்டு அருள்பாலிக்கிறார். பொதுவாக, பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசை நோக்கியும், சொர்க்கவாசல் வேறொரு திசை நோக்கியும் இருக்கும். ஆனால், இங்கு சொர்க்கவாசலும், கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பம்சம். வீடு கட்ட, விளை நிலங்களை வாங்க நினைப்பவர்கள். கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இத்தல பெருமாளை வழிபட்டு பலனடைகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !