உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிப் பெண்களைக் காக்கும் கடவுள்!

கன்னிப் பெண்களைக் காக்கும் கடவுள்!

சிவாம்சமான வீரபத்திரரை தண்டாயுதம் ஏந்திய கோலத்திலேயே நாம் தரிசித்திருப்போம். ஆனால், கைகளில் ருத்ராட்ச மாலை, மழு தாங்கி, அமர்ந்த கோலத்தில் தரிசிப்பது, சென்னை வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரர் திருக்கோயிலில், இங்கு இவர் கன்னிப் பெண்களைக் காக்கும் தெய்வமாக வணங்கப் படுகிறார். அசுரன் ஒருவனை அழிக்கச் சென்ற சப்த கன்னியர் தவறுதலாக ஒரு முனிவரைக் கொன்று விட்டனர். தம்மை அழிக்க சப்த கன்னியர் புறப்பட்டிருக்கும் செய்தியை அசுரன் அறிந்து கொள்கிறான். முனிவரைக் கொன்ற பாபம் ஒருபுறம், அசுரனின் மிரட்டல் மறுபுறம் என, தவித்த சப்த கன்னியர் சிவபெருமானை அடிபணிய, அவர்களைக் காக்க, தம் அம்சமான வீரபத்திரரை அனுப்பி வைத்தார் சிவபெருமான். வீரபத்திரர் சப்த கன்னியரைக் காத்ததோடு, அசுரனையும் அழித்தார். இதனால் சப்த கன்னியரின் அருகில் வீரபத்திரர் காவல் தெய்வமாக அருள்புரிகிறார். இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமியிலும் வீரபத்திரருக்கு விசேஷ ஆராதனை நடக்கிறது. பெண்கள் வீரபத்திரருக்குப் பாலபிஷேகம் செய்தும். வெற்றிலை மாலை அணிவித்தும் வேண்டிக்கொள்ள, அவர்களின் பிரார்த்தனை கைகூடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !