காக்கும் கருப்பன்
சுத்தவெண் பாற்கடல் தன்னில் துயின்று பின்
தொண்டர்கள் கொண்டாடவே
தோன்றிய உறங்காப் புளிக்குள்வளர்மாமணித்
துளபமணி! சிந்தாமணி!
பக்தர்கள் தமக்கினிய நித்தியபரி பூரணம்
பவளமணி! என் கண்மணி
பாருலகில் மகரமா தம் தன்னில் சுக்கிர
பகவானின் வாரமதிலே-
சித்தமுத் திருளப்ப பூசாரி மேல்வந்து
திருவிளையாடல் செய்வாய்!
சிங்கையப் பதியில்வளர் எங்கள் குல தெய்வமே!
ஜெயஜெய கருப்பண்ணனே! (1.)
கருப்பனே துணையென் றிருப்பவர் நெஞ்சிலே
காணாத காட்சிதோன்றும்!
கருணைசேர் உன்பதியை நோக்கிவரு வார்பிணி
கவலைகள் யாவும் தீரும்!
மருப்படா மேனியான் உன்பாதம் சேவிக்க
வாராத செல்வம் வரும்!
வாழ்வுதரும் உன்னுடைய கொலுமுகம் காணவே
மனமும்நிம் மதிதான்பெறும்!
வெறிப்பான பூதகணம் விலகிவிடும் உன்கோவில்
வெண்ணீறு தனை அணிந்தால்!
மேலான கல்வியும், ஞானமும் விளங்குமே
வேண்டிப் பணிந்துவந்தால்!
பிறப்புடன் இறப்பென்னும் தவிப்பகல வேண்டினேன்
பிள்ளை உன் துணைவேண்டினேன்
பெருகுசிங் கைப்பதியில் உருகிவரும் அடியவர்
பெருமான் கருப்பண்ணனே!