சிதம்பரம் மாரியம்மன் கோவிலில் 27ம் தேதி தீமிதி விழா!
ADDED :3787 days ago
சிதம்பரம்: ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி சிதம்பரம், கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் கடந்த 17ம் தேதி தீ மிதி விழா உற்சவ கொடியேற்றம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய விழாவாக வரும் 27ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது. இதற்கிடையே ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி, பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.