உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரகண்டநல்லூரில் சாகை வார்த்தல் விழா!

அரகண்டநல்லூரில் சாகை வார்த்தல் விழா!

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவையெ  õட்டி நேற்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. முற்பகல் 11:30 மணிக்கு தென்பெண்ணை   ஆற்றில் இருந்து சக்தி கரகம் புறப்பாடாகி, முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பெண்கள் கூழ், கஞ்சிகுடத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு   சென்றனர். பகல் 12:30 மணிக்கு அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சோடசோபவுபச்சார தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !