உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லைபிடாரி அம்மனுக்கு பால்குட அபிஷேகம்!

எல்லைபிடாரி அம்மனுக்கு பால்குட அபிஷேகம்!

விழுப்புரம்: விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஓம் எல்லைபிடாரி அம்மனுக்கு ஆடி திருவிழா நடந்தது. விழாவை யொட்டி   பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து கடந்த 21ம் தேதி காலை 6:30  பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் ஓம் எல்லைபிடாரி அம்மனுக்கு அபி÷  ஷகம் செய்தனர். பின்னர் பகல் 12:00 மணிக்கு சக்தி பூங்கரகம் வீதியுலா, 1:00 மணிக்கு விமான ஊஞ்சல், சாகை வார்த்தல் நடந்தது. மாலை 4:30   மணிக்கு பொங்கல் வழிபாடு, 6:30 மணிக்கு அக்னிசட்டி எடுத்தல், இரவு 8:00 மணிக்கு கும்பம் படைத்தல், 9:00 மணிக்கு ஓம் எல்லை பிடாரி   அம்மன் வீதியுலா நடந்தது. மறுநாள் மாலை 6:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !