உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதாஸ்ரம குருகுலத்தில் விஷேச ஹோமம்!

வேதாஸ்ரம குருகுலத்தில் விஷேச ஹோமம்!

புதுச்சேரி: கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் நினைவு தினத்தையொட்டி விசேஷ ஹோமம் நடந்தது. இந்து தர்மம்   அழியாமல் காத்திட அரும்பாடுபட்டவர்களுள் சிவ தொண்டர்கள் என்று போற்றப்படும் 63 நாயன்மார்களில் அதிமுக்கியமானவர்கள் நால்வர்.ஆதி   சைவ குலத்தில் தோன்றியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நினைவு தினமான ஆடி சுவாதியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி கருவடிக்குப்பத்தில் உள்ள வேதாஸ்ரம குருகுலத்தில் நேற்று காலை விசேஷ  ஹோமம் நடந்தது. அபிஷேகம், அன்னதானம், அஸ்னவ பூஜை, கோபூஜை மற்றும் குருகுல   மாணவர்கள் வேதபாராயணம் தேவாரம் பாடினர்.  மகா தீபாராதனை செய்து சுவாமிகளின் சிலை ஊர்வலம் நடந்தது. ஆதி சைவ சிவாச்சார்ய சமூ  கத்தினர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !